தமிழ் சினிமா

“நான் பார்த்த அதிசய மனிதர்” - இளையராஜா குறித்து ரஜினி புகழாரம்!

ப்ரியா

சென்னை: “இதிகாசங்களிலும் புராணங்களிலும் தான் அதிசய மனிதர்களை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான்” என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இதனையொட்டி இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்​னை, நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் திரையுல​கில் பொன் விழா காணும் இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு தமிழக அரசின் சார்​பில் மிகப்​பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய ரஜினிகாந்த், “இதிகாசங்களிலும் புராணங்களிலும் தான் அதிசய மனிதர்களை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் நான் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான். நம்முடைய உலகம் வேறு அவருடைய உலகம் வேறு. அவர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் ஒருவர் வந்தார். ராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் அவரிடம் சென்றுவிட்டனர். ரஜினிகாந்த் உட்பட. ஆனால் இளையராஜாவிடம் எந்த சலனமும் இல்லை. இப்போதும் அவருடைய பாடல்கள் சூப்பர்ஹிட் ஆகின்றன” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT