தமிழ் சினிமா

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

ஸ்டார்க்கர்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (செப்.4) இயக்குநர் வெற்றிமாறன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சிம்பு படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணியளவில் தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் தளத்தில் இப்படம் குறித்த சிறிய வீடியோ பதிவின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனை சிம்புவும் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் தாணு தயாரிக்கார்.

சிம்பு நடிக்க இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படமாக்கியுள்ளார் வெற்றிமாறன். அதனை முழுமையாக வெளியிடாமல் ஒரு சிறிய பகுதியை மட்டுமே வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடித்தவர்களில் தனுஷை தவிர பலர் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்புவுடன் நடிக்கவுள்ளதை வெற்றிமாறன் உறுதிப்படுத்தி இருக்கிறார். அது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.

சிம்புவின் சம்பளம் பிரச்சினையால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பதால், சிம்புவிடம் நடைபெற்ற சம்பளப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். https://t.co/6QoXAEq9PL@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47 pic.twitter.com/ys4zbVBwux

SCROLL FOR NEXT