தமிழ் சினிமா

தீபாவளி வெளியீட்டில் இணைந்தது ‘டீசல்’

ப்ரியா

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘டீசல்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘டீசல்’. இப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. சமீபத்தில் இதன் பாடலொன்று இணையத்தில் பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

தற்போது ‘டீசல்’ தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், படத்தின் டீஸர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக மாறியிருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

தேர்டு ஐ நிறுவனம் மற்றும் எஸ்பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டீசல்’. இதில் அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், கருணாஸ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் ஹரிஷ் கல்யாண் உடன் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

A stubborn dream, a genuine effort

Here’s the #Diesel teaser for you all - https://t.co/LQZMJ6WXkX#DieselDiwali pic.twitter.com/TUZdSnh3uM

SCROLL FOR NEXT