தமிழ் சினிமா

கடலோர காதல் கதையை சொல்லும் ‘18 மைல்ஸ்’!

செய்திப்பிரிவு

அசோக் செல்வன், மிர்னா நடிப்பில் உருவாகும் படம், ‘18 மைல்ஸ்’. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்தப் படத்துக்கு கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். சித்து குமார் இசையமைக்கிறார்.

இந்தப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “காதல் உலக மொழி என்றாலும் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் அதற்கு இன்னும் தடையாகவே இருக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை மையமாக வைத்து, இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இது ஒரு கடலோர காதல் கதை, காதலர்கள் இந்தப் படத்துடன் இணைவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT