தமிழ் சினிமா

ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி ஏன்? - ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்

ஸ்டார்க்கர்

ரஜினியின் ‘தர்பார்’ படம் தோல்விக்கான காரணம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படத்தில் என்ன தவறு நடந்தது என்பதை பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அப்பேட்டியில் ‘தர்பார்’ தோல்விக்கான காரணம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் “‘தர்பார்’ படத்தினை இன்னும் பிரம்மாண்டமாக, நுட்பமாக இயக்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அக்கதையில் நிறைய டிராவல் இருந்தது. அதெல்லாம் வேண்டாம் என்று சுருக்கி எடுத்தேன். ரஜினி சாரை வைத்து நிஜமான இடத்தில் படமாக்க வேண்டாம் எனவும் கருதினேன்.

அப்பா - மகள் கதையாகத்தான் அக்கதை இருந்தது. நயன்தாரா உள்ளே வந்தவுடன், அக்கதையின் போக்கு மாறியது. மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. குறுகிய காலத்தில் ரொம்ப சந்தோஷத்தில் இயக்கிய படம் வேறு. அதன் கதையினை ரொம்ப சீக்கிரமே எழுதியது ஒரு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

SCROLL FOR NEXT