தமிழ் சினிமா

மீண்டும் இணைகிறது ‘அக்யூஸ்ட்’ டீம்!

செய்திப்பிரிவு

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கிய இதில் கன்னட நடிகை ஜான்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்த இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், அழகன் தமிழ்மணி, சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நடிகர் உதயா பேசுகை​யில், “இந்​தப் படம் திரையரங்​கில் மூன்றாவது வார​மாக, ஓடிக் கொண்டிருக்​கிறது. திரைத்​துறை​யில் சூழ்ச்​சி, பகைமை என பல விஷ​யங்​கள் இருக்​கின்​றன. ஒரு படத்தை வர விடக்​கூ​டாது என தடுக்​கிறார்​கள். அதை​யும் கடந்து இந்​தப் படம் வெளி​யாகி வெற்றி பெற்று இருக்​கிறது என்​றால், அதற்கு மக்​கள் காரணம். சினி​மா​வில் எந்த சங்​க​மாக இருந்தாலும் அவை உறு​தி​யாக இருக்க வேண்​டும்.‌ ஏனெனில் தமிழ் சினிமா ‘மோனோ​போலி’​யாக இருக்கிறது. நான் இதை உறுதியாகச் சொல்​கிறேன். இதில் நாம் வெற்றி பெறு​வது என்​பது கடினம்.

இத்​தனை ஆண்​டு​கால சினிமா அனுபவம் கொண்ட எங்​களுக்கே இப்​படி ஏற்​படு​கிறது என்​றால், புதி​தாக வரும் தயாரிப்​பாளர்​கள் நிலையை நினைக்கவே கஷ்ட​மாக இருக்​கிறது. தயாரிப்பாளர்​கள் சங்​கத்​தில் சுயநலம் அதி​கம் இருக்​கிறது. அங்கு ஆற்​றல்மிக்க அணி உரு​வாக வேண்​டும். இந்த ‘அக்​யூஸ்ட்’ படத்​தின் டீம் மீண்​டும் இணைந்து பணி​யாற்​றத் திட்​ட​மிட்​டுள்​ளோம்​” என்​றார்​.

SCROLL FOR NEXT