தமிழ் சினிமா

பரவும் வதந்தி: சிம்பு – வெற்றிமாறன் படத்தின் நிலை என்ன?

ஸ்டார்க்கர்

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக விசாரித்தால், “ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இணையத்தில் பரவும் வதந்தியில் உண்மையில்லை” என்கிறார்கள். ஆனால், சிம்பு சம்பளம் அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது சுமுகமாக முடிந்தால் மட்டுமே இப்படம் நடக்கும் என்கிறது ஒரு தரப்பு.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே முடிவுக்கு வரும். தற்போதைக்கு சிம்பு வைத்து படமாக்கப்பட்டுள்ள அறிமுக வீடியோவின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை விரைவில் வெளியிட்டால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.

சிம்பு – வெற்றிமாறன் படக்கூட்டணி குறித்த வதந்திகள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக சிம்புவின் ரசிகர்கள் பலரும் அவரையே திட்டும் அளவுக்கு இந்த வதந்தி அமைந்திருக்கிறது.

SCROLL FOR NEXT