தமிழ் சினிமா

‘நீயா 2’வுக்காக மீண்டும் படமாக்கப்படும் ‘ஒரே ஜீவன்’ பாடல்

செய்திப்பிரிவு

’நீயா 2’ படத்துக்காக, பழைய ‘நீயா’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரே ஜீவன்’ பாடலை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கமல் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ல் வந்த படம் ‘நீயா’. இதன் 2-ம் பாகம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய பரிமாணத்தில் தயாராகிறது. நாயகனாக ஜெய் நடிக்க, வரலட்சுமி, கத்ரீன் தெரசா, ராய் லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். எல்.சுரேஷ் இயக்கி வருகிறார்.

புதுச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ‘நீயா’  படத்தில் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் மிகவும் பிரபலமானது. இதில் ஸ்ரீப்ரியா நடனமாடியிருப்பார்.

இப்பாடலின் உரிமையை ‘நீயா 2’ படக்குழு வாங்கியுள்ளது. இதனை ரீமிக்ஸ் செய்யலாமா அல்லது அப்படியே அப்பாடலை படமாக்கலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.

SCROLL FOR NEXT