தமிழ் சினிமா

‘பேட் கேர்ள்’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

ஸ்டார்க்கர்

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும் இதனை கடுமையாக விமர்சித்தார்கள். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு ஒரே சேர இருந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி ‘பேட் கேர்ள்’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கவுள்ளது. முன்னதாக, இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு விருதுகளை வென்றுள்ளது. குறிப்பாக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் மிக உயரிய விருதான NETPAC விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

‘பேட் கேர்ள்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் வர்ஷா பரத். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

She's finally coming home! After winning hearts and awards at several international film festivals, #BadGirl is coming to theatres from September 5th!@anuragkashyap72 #VetriMaaran @GrassRootFilmCo @varshabharath03#AnjaliSivaraman @ItsAmitTrivedi pic.twitter.com/ZCp9HMPiG1

SCROLL FOR NEXT