தமிழ் சினிமா

சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!

செய்திப்பிரிவு

பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு. தீரன், காளி, இரும்புத்திரை, தடம், கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன் என பல படங்களில் நடித்துள்ள இவர், ‘திருக்குறள்’ படத்தில் ‘தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்ததை மறக்க முடியாது என்கிறார்.

அவர் கூறும்போது, “தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தேன். சினிமா மீதான ஆர்வத்தால், அதைத் துறந்து, நடிப்புப் பயிற்சிப் பெற்றேன்.

கடந்த 8 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ‘திருக்குறள்’ படத்தில் வீரமும் காதலும் நிறைந்த ’தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்தது, பாராட்டப்பட்டது. அடுத்து முன்னணி இயக்குநர்கள் இயக்கும் ரிவால்வர் ரீட்டா, மாரீசன், கேங், தடை அதை உடை, மிராஜ் (மலையாளம்) உள்பட பல படங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT