தமிழ் சினிமா

ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!

ஸ்டார்க்கர்

ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் திரையரங்குகளில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், ஓடிடி தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வரவேற்பை முன்வைத்து அடுத்த படத்தையும் முடித்துவிட்டார்கள். ’ஜென்ம நட்சத்திரம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.

ஹாரர் த்ரில்லர் கதையாக ‘ஜென்ம நட்சத்திரம்’ உருவாகி இருக்கிறது. இதனை அமோஹம் ஸ்டூடியோஸ் மற்றும் ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக கே.ஜி, இசையமைப்பாளராக சஞ்சய் மாணிக்கம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் தமன் அக்‌ஷன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷா செரின், சிவம், அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஸ்காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தினை உலகமெங்கும் வெளியிடும் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT