தமிழ் சினிமா

‘ராம் மாதிரி இயக்குநர்கள் நமக்கு தேவை’ - இயக்குநர் பாலா

செய்திப்பிரிவு

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.

ஜுலை 4-ல் வெளியாகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, விக்ரமன், பாலாஜி சக்திவேல், பாலா, வெற்றிமாறன், நடிகர் சித்தார்த், மருத்துவர் கு.சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாலா பேசும் போது, “ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவை” என்றார்.

இயக்குநர் சசி பேசும்போது, “தனது முந்தைய படங்களை விட அடுத்த படத்தில் இன்னும் அதிக உழைப்பை கொடுப்பவர் ராம். குழந்தைகளுடைய உலகத்துக்குள் இந்தப் படம் மூலம் எளிதாகப் பயணிக்க முடியும். நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT