தமிழ் சினிமா

10 படங்களை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம்!

செய்திப்பிரிவு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ், 2025 முதல் 2027 -ம் ஆண்டு வரை, 10 படங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தப் படங்களை இயக்க உள்ள இயக்குநர்கள் குறித்த வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர். சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் அந்தோணி, அருண் ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்லா அய்யாவு, கணேஷ் பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் படமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT