தமிழ் சினிமா

‘தக் லைஃப்’ படத்துக்கு அபராத வடிவில் அடுத்த அடி - காரணம் என்ன?

ஸ்டார்க்கர்

‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு தேசிய மல்டிப்ளக்ஸ் சங்கம் அபராதம் விதித்திருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

கமல் - மணிரத்னம் கூட்டணியில் வெளியான ‘தக் லைஃப்’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்திய அளவில் எந்தவொரு மொழியிலுமே இப்படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனிடையே இப்படம் 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிடப்படும் என்று கமல் அறிவித்தார். இதுவே அவருக்கு படத்தின் மீதான நம்பிக்கையை காட்டியது.

தற்போது ‘தக் லைஃப்’ வெளியாகி பெரும் தோல்வியடைந்துவிட்டது. இதனால் 8 வாரங்கள் கழித்து ஓடிடி வெளியீடு என்ற ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது படக்குழு. இந்த ஒப்பந்தத்தால் மட்டுமே தேசிய மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் ‘தக் லைஃப்’ வெளியானது. தற்போது ஒப்பந்தத்தை மீறிய காரணத்தினால் படக்குழுவினருக்கு 25 லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், இதன் ஓடிடி உரிமைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 130 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தது. தற்போது படம் தோல்வியால் ரூ.90 கோடி தான் அளிக்க முடியும் என்றது. பின்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ.110 கோடி ரூபாய்க்கு ஒப்புக் கொண்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

SCROLL FOR NEXT