தமிழ் சினிமா

புதிய தோற்றத்தில் நடிகர் அஜித்குமார்: வைரலாகும் புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

நடிகர் அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம், கடந்த ஏப்.10-ல் வெளியானது. இதையடுத்து ஆதிக் இயக்கத்தில் அஜித்குமார் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த ஆண்டில் இதுவரை மூன்று கார் ரேஸில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார். அந்த மூன்றிலும் அவர் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐரோப்பாவில் நடைபெற உள்ள ஜிடி4 கார் ரேஸின் 3-வது சுற்றில் பங்கேற்பதற்காகத் தயாராகி வருகிறார் அஜித்குமார்.

இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள அவர் அங்குள்ள ஸ்பா ஃபிராங்கோர்சாம்ப்ஸ் சர்க்யூட்டில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அங்கு மொட்டையடித்தபடி புதிய தோற்றத்தில் பயிற்சியில் கலந்து கொண்ட அவருடைய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

SCROLL FOR NEXT