தமிழ் சினிமா

விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா? - மமிதா பைஜு அப்டேட்

ஸ்டார்க்கர்

‘ஜனநாயகன்’ கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் குறித்து பேசியிருக்கிறார் மமிதா பைஜு.

இன்று (ஜூன் 22) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் விஜய். இதனை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இது விஜய்யின் கடைசிப் படம், இதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இது விஜய் ரசிகர்களை சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது.

தற்போது விஜய் குறித்து மமிதா பைஜு பேசியிருப்பது, விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, விஜய்யின் கடைசிப் படத்தில் நடித்திருப்பது குறித்த கேள்விக்கு, “‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரிடம், “இதுதான் உங்களுடைய கடைசிப் படமா?” என்று கேட்டேன். அதற்கு “தெரியவில்லை. தேர்தல் முடிந்ததும் பார்ப்போம்” என்று பதிலளித்தார்.

அவருடைய கடைசி நாள் படப்பிடிப்பில் அனைவருமே ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டோம். விஜய் சாருமே ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.

‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மமிதா பைஜு. ஆகையால் இவருடைய இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT