தமிழ் சினிமா

மீண்டும் இணைகிறது ‘மகாராஜா’ கூட்டணி!

ஸ்டார்க்கர்

நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘மகாராஜா’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இன்னும் நித்திலன் படம் எதுவும் இயக்காமல் இருக்கிறார். நயன்தாரா படம் இயக்கவுள்ளார், அஜித் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியானாலும் எதுவுமே உறுதியாகவில்லை. இதனிடையே மீண்டும் ‘மகாராஜா’ கூட்டணி இணைவது உறுதியாகி இருக்கிறது.

விஜய் சேதுபதி – நித்திலன் இணையும் படத்தினை ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பூரி ஜெகந்நாத் படத்தினை முடித்துவிட்டு, நித்திலன் படத்துக்கு விஜய் சேதுபதி தேதிகள் ஒதுக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்துக்கான திரைக்கதையை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் நித்திலன்.

விஜய் சேதுபதி – நித்திலன் கூட்டணியில் வெளியான படம் ‘மகாராஜா’. இப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 50-வது படமாகும். அவருடைய திரையுலக வாழ்வில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்திய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT