தமிழ் சினிமா

‘கொம்புசீவி’ படக்குழுவுக்கு சண்முக பாண்டியன் கவுரவம்

செய்திப்பிரிவு

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படம், ‘கொம்புசீவி'. சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா, சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும்இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.

தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி பகுதிகளைச் சுற்றியுள்ளமக்களின் வாழ்க்கையை பேசும்இந்தப் படத்தில் நகைச்சுவைக்கும் ஆக் ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு படக்குழுவினருக்கு புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி சண்முக பாண்டியன் கவுரவித்துள்ளார்.

இதுகுறித்து சண்முக பாண்டியன் கூறும்போது, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே என்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு அள்ளி கொடுத்தவர் எனது தந்தைவிஜயகாந்த். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி ‘கொம்புசீவி' படம் உருவாகக் கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த அன்பளிப்பாக உணவு, உடைகளை பகிர்ந்து கொண்டேன்" என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT