தமிழ் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘பாம்’ - டி.இமான் இசையமைக்கிறார்

செய்திப்பிரிவு

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். இதில் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நிசார், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT