தமிழ் சினிமா

பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக ‘ஹும்’ இருக்கும் - இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் படம், ‘ஹும்'. கிருஷ்ணவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை 'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர்கள் எல். சுரேஷ், இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி இயக்குநர் கிருஷ்ணவேல் ேபசும்போது, “நான் எந்த இயக்குநரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. கரோனா காலகட்டத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய மகளை நாயகியாக்கி திரைப்படம் தயாரிக்க வேண்டும் என சொன்னார்.‌ அதற்காக ஒரு கதையை எழுதினோம். கதை எழுதிய பிறகு தயாரிப்பாளர் பின்வாங்கி விட்டார். அந்தத் தருணத்தில் தான் யாருடைய முகத்தையும் காண்பிக்காமல் ஒரு படத்தை உருவாக்கலாம் என நினைத்து இப்படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன்.

'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்துக்குப் பெயர் இருக்காது. அதுவும் இந்த திரைப்படத்துக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் எதைக் கண்டும் அச்சப்படக் கூடாது என்பது குறித்தும்விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும். இது பல படங்களின் தழுவலாகவும் இருக்கலாம்.சாயலாகவும் இருக்கலாம். காப்பி என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால் கதை புதிது. அதற்கு நான் உத்தரவாதம்” என்றார்.

SCROLL FOR NEXT