தமிழ் சினிமா

வெற்றிமாறன் – சிம்பு படத்தில் நடிகராக நெல்சன் அறிமுகம்!

ஸ்டார்க்கர்

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி இணையும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இயக்குநர் நெல்சன்.

‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால் சிம்பு நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது. குறுகியகால தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனையும் தாணுவே தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் மூலம் இயக்குநர் நெல்சன் நடிகராகவும் அறிமுகமாகிறார். இதில் வரும் முக்கிய சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார் நெல்சன். அதுமட்டுமன்றி முதன்முறையாக தனது படத்துக்காக ப்ரோமோ ஷூட் ஒன்றையும் நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். இதில் சிம்பு – நெல்சன் இணைந்து நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் மூலம் நெல்சனும் நடிகராக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது.

சிம்பு – நெல்சன் இருவருமே நெருங்கிய நண்பர்கள். நெல்சன் இயக்குநராக அறிமுகமாக இருந்த ‘வேட்டை மன்னன்’ படத்தின் நாயகன் சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு பைனான்ஸ் சிக்கலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT