தமிழ் சினிமா

6 நாட்களில் நடக்கும் ஹாரர் கதை ‘ஹோலோகாஸ்ட்’

செய்திப்பிரிவு

ஷட்டர் பிரேம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பிபின் மிட்டாதில் தயாரித்துள்ள ஹாரர் படத்துக்கு ‘ஹோலோகாஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ஜெயகிருஷ்ணன், ஷர்மிளா, நந்தன் உன்னி, தன்வி வினோத், மிதுன்வெம்பலக்கல், ப்ரீத்தி ஜினோ, நஸ்ரின் நசீர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இசையமைத்துள்ளார். விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மனோஜ் குமார் வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தை விஷ்ணு சந்திரன் இயக்கியுள்ளார்.

அவர் கூறும்போது, “இது உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று ஹாரர் படம். ஜுதன்ஸ் பற்றி வரும் முதல் தமிழ்ப் படம் இதுதான். பொதுவாக ஹாரர் படங்கள் எடுக்கும்போது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடக்கும் என்று கேள்விப்பட்டிருப் போம். அது எங்கள் படத்துக்கும் நடந்தது. இந்தக் கதையை எழுதத் தொடங்கியது முதல் பல்வேறு வகையான இடையூறுகளைச் சந்தித் தேன். அதோடு பெரிய விபத்தையும் எதிர்கொண்டேன். 6 நாட்களில் நடக்கும் இந்த கதை, காஞ்சூரிங், இன்சிடியஸ், ஈவில் டெத் போன்ற படங்கள் வரிசையில் ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார். இந்தப் படம் ஜூன் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT