தமிழ் சினிமா

அதர்வாவின் ‘DNA’ ஜூன் 20-ல் ரிலீஸ்

ஸ்டார்க்கர்

அதர்வா நடித்துள்ள ‘DNA’ திரைப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘DNA’. இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தினால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது ஜூன் 20-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ட்ரெய்லர், பாடல்கள் என வெளியிட படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தினை திரையுலகினர் பலரும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘DNA’ படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றி இருக்கிறது. இசை உரிமையினை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதால் தயாரிப்பு தரப்பு இப்போதே லாபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT