தமிழ் சினிமா

‘அக்யூஸ்ட்’ படத்துக்காக பேருந்தை விலைக்கு வாங்கி சண்டைக் காட்சி படப்பிடிப்பு

செய்திப்பிரிவு

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம், ‘அக்யூஸ்ட்’. இதை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தப் படத்தில் பேருந்து சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஹைலைட்டான இந்த சண்டைக்காட்சிக்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.இதுபற்றி படக்குழு கூறும்போது, “படத்தின் முக்கியமான இடத்தில் இந்த சண்டைக் காட்சி வருகிறது. இதற்காக ஒரு பேருந்தை விலைக்கு வாங்கியும் மற்றொரு பேருந்தை வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தினோம். ஸ்டன்ட் சில்வா, இந்த ஆக்‌ஷன் காட்சியை வடிவமைத்தார். இதில் சுமார் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிக்காக மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளோம்” என்றனர்.

SCROLL FOR NEXT