சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான நாகிரெட்டி விருது கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிப்பில், 2013ல் வெளியான படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. பொன்ராம் இயக்க, இமான் இசைமையத்து இருந்தார். மதன் இப்படத்தினை தயாரித்தார்.
காமெடியில் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாது, வசூலையும் வாரிக் குவித்தது இப்படம். தற்போது இப்படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
விஜயா மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டுத்தோறும், சிறந்த பொழுதுபோக்கு படத்திற்காக நாகிரெட்டி பெயரில் விருதுகளை வழங்கி வருகிறார்கள்.
2013ம் ஆண்டிற்கான சிறந்த பொழுதுபோக்கு படமாக தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தினை தேர்வு செய்திருக்கிறார்கள்.