தமிழ் சினிமா

ஓடிடியில் வெளியாகிறது ‘லால் சலாம்’

ப்ரியா

பல்வேறு சிக்கல்களை சந்தித்த ‘லால் சலாம்’ திரைப்படம் ஒருவழியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

ஹார்ட் டிஸ்க் பிரச்சினையால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது ‘லால் சலாம்’ திரைப்படம். சில காட்சிகளை எடிட்டிங்கில் மாற்றி வெளியிட்டார்கள். இறுதியாக படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவியது. இதனை கணக்கில் கொண்டு எந்தவொரு ஓடிடி நிறுவனமும் இப்படத்தை வாங்க முன்வரவில்லை.

பல்வேறு ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ‘லால் சலாம்’ வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி வெளியான இப்படம், தற்போது பக்ரீத் அன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லால் சலாம்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

Stay tuned & Guess who’s firing up the screen this Bakrid? #SunNXTPremiere #SunNXTBakrid #SunNXT pic.twitter.com/ZHkCjzfEVf

SCROLL FOR NEXT