தமிழ் சினிமா

‘வாசிப்பதையும், சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் நடிகர் ராஜேஷ்’ - கமல்ஹாசன் புகழஞ்சலி

மார்கோ

சென்னை: “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும், வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது” என்று நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தேடல் உள்ள நடிப்புக் கலைஞர்களில் அதிகம் வாசிப்பதையும் வாசித்ததைச் சிந்திப்பதையும் வழக்கமாகக்கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ்.

தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும் செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வேதனைப்படும் குடும்பத்தாருக்கு என் ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT