தமிழ் சினிமா

இந்தியில் அறிமுகமாகும் அமலாபால்

ஸ்கிரீனன்

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளைத் தொடர்ந்து இந்தியி திரைப்படங்களிலும் அறிமுகமாகவுள்ளார் நடிகை அமலாபால்

’சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து ‘மைனா’, ‘தெய்வத் திருமகள்’,’தலைவா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை நடித்திருக்கிறார்.

தமிழ் படங்கள் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது முதன் முறையாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அமலாபால்.இதி அர்ஜுன் ராம்பால் நாயகனாக நடிக்கவுள்ளார். அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்தியில் அறிமுகமாகவுள்ளது குறித்து அமலாபால், “இந்தியில் அறிமுகமாக பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நல்ல கதாபாத்திரத்துக்காக மட்டுமே காத்திருந்தேன். எனது தமிழ் படங்களைப் பார்த்து, நான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குநர் நரேன் என்னை அணுகினார். கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்ததால் ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழில் விஷ்ணு விஷாலுக்கு நாயகியாக அமலாபால் நடித்திருக்கும் ‘ராட்சசன்’ வெளியீட்டு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT