தமிழ் சினிமா

“இவர்களால் எனக்கு நன்மைதான்...” - ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்

ஸ்டார்க்கர்

‘தக் லைஃப்’ படத்தை வெவ்வேறு மாநிலங்களில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் “ஹாரிஸ், அனிருத், சாய் அபயங்கர் உள்ளிட்ட பலர் உங்களிடம் இருந்து சென்று பெரிய இசையமைப்பாளராக ஆகியிருக்கிறார்கள். அதில் உங்களுக்கு சந்தோஷமா, பொறாமையா?” என்ற கேள்வி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு “எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எவ்வளவு குறைவாக படங்கள் செய்கிறோமோ, அவ்வளவு திறமையாக இசையமைக்க முடியும்.

நிறைய பேர் இல்லையென்றால் என்னிடம் வருவார்கள். முடியாது என்று சொன்னால் படம் பண்ண மாட்டேன் என்கிறார் என்று சொல்வார்கள். அது இப்போது முடியாது. ஹாரிஸ், அனிருத், சாய் எல்லாம் பண்ணும்போது என்னுடைய படங்களுக்கு இசையமைக்க இன்னும் அதிக நேரம் கிடைக்கிறது. அதனால், நிறைய தரமான இசையைக் கொடுக்க முடிகிறது” என்று பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

SCROLL FOR NEXT