தமிழ் சினிமா

‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகல்

ஸ்டார்க்கர்

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகியிருக்கிறார். ‘அனிமல்’ படத்துக்குப் பின் சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படம் உருவாக இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது பிரபாஸ் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் பிரபாஸுக்கு நாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தமானார். பின்பு இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.

தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறொருவரை நடிக்கவைக்க படக்குழு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன் நாயகியை ஒப்பந்தம் செய்ய படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT