தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது: வெற்றிமாறன்

ஸ்டார்க்கர்

‘வாடிவாசல்’ படத்தின் எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களாக சூர்யா - வெற்றிமாறன் இணைப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. கண்டிப்பாக இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு, சூர்யா மற்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளனர். அதற்கான முதற்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் வெற்றிமாறனிடம் ‘வாடிவாசல்’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அந்த எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல. அந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. எனது ஒவ்வொரு படத்தை உருவாக்கும்போது எனது 100% உழைப்பைக் கொடுப்பேன்” என்று பதிலளித்துள்ளார் வெற்றிமாறன்

தற்போது ஆர்.ஜே.பாலாஜி படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி படத்தை துவங்கவுள்ளார் சூர்யா. அதனைத் தொடர்ந்து ‘வாடிவாசல்’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார்.

SCROLL FOR NEXT