சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இதன் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன.
தற்போது சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். 90-களில் நடக்கும் கதை என்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது படக்குழு.
‘ஃப்ரீடம்’ படத்தின் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
#Freedom coming to theatres on 10th July 2025.#FreedomFromJuly10
Directed by @Sathyasivadir
Produced by @vijayganapathys @PandiyanParasu @GhibranVaibodha@jose_lijomol @thesudevnair @DirectorBose @MalavikaBJP @nsuthay @artuthaya @Arunbharathi_A #SrikanthNB @KavingarSnekan pic.twitter.com/OU3n4DxC4O