தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘கஜினிகாந்த்’ கூட்டணி

கா.இசக்கி முத்து

சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் ஆர்யா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய திட்டமிட்டுள்ளனர்.

ஆர்யா, சயிஷா சைகல், கருணாகரன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ‘யு’ சான்றிதழ் படம்  ‘கஜினிகாந்த்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சந்தோஷ் - ஆர்யா இணைந்து படம் பண்ண முடிவு செய்திருக்கிறார்கள். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்கிறது. ‘கஜினிகாந்த்’ படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களே இதிலும் பணிபுரிவார்கள் என தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT