தமிழ் சினிமா

‘அடங்காதே’ அரசியல் படமா?

செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் குமார், சரத்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘அடங்காதே’. சுரபி நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இந்தி நடிகை மந்திரா பேடி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ கிரீன் புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ். சரவணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இ5 என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் வெளியிடுகிறார்.

படம் பற்றி இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறும்போது, "இது அரசியல் திரில்லர் கதையை கொண்ட படம். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சரத்குமாரும் நடித்துள்ளனர். திருச்சியில் ஆரம்பிக்கும் கதை, காசி வரை நீள்கிறது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT