தமிழ் சினிமா

சினிமாவாகிறது பெருமாள் முருகனின் ‘கூளமாதாரி’!

செய்திப்பிரிவு

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘சேத்துமான்’, 'கோடித்துணி' உள்பட சில கதைகள், திரைப்படமாகி உள்ளன. அவரது ‘பூக்குழி’ நாவலும் திரைப்படமாகி வருகிறது. இதை ‘சேத்துமான்' தமிழ், இயக்குகிறார். தர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். இந்நிலையில் பெருமாள் முருகனின் புகழ்பெற்ற நாவலான ‘கூளமாதாரி’ திரைப்படமாகிறது.

இதை பாலாஜி மோகன், பிரசாத் ராமர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்குமார் இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆடுகள் மேய்க்கும் அவர்களின் வறுமையையும் இயலாமையையும் பேசும் நாவல் இது.

வரவேற்பைப் பெற்ற இந்த நாவலை, சில மாற்றங்களுடன் திரைப்படமாக்க உள்ளனர். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதில் நடிக்கும் சிறுவர்களுக்கு, இரண்டு வாரங்கள் நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT