தமிழ் சினிமா

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

நடிகர் அஜித்குமார், டெல்லியில் கடந்த திங்கட்கிழமை நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு-விடம் இருந்து பத்மபூஷண் விருதைப் பெற்றார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். அவரை ரசிகர்கள் திரண்டு வரவேற்றனர்.

இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஜித்குமார் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த செய்தி பரபரப்பானது. அவர் துபாய் செல்ல இருப்பதால் வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT