தமிழ் சினிமா

ரீ-ரிலீஸ் ஆகிறது ‘சுந்தரா டிராவல்ஸ்’

ப்ரியா

முரளி, வடிவேலு நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது.

2002-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சுந்தரா டிராவல்ஸ்’. தஹா இயக்கத்தில் முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘இ பறக்கும் தள்ளிகா’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். அதனையும் தஹா தான் இயக்கி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இதன் மறுவெளியீட்டு உரிமையினை சிவபெருமான் என்பவர் கைப்பற்றி இருக்கிறார். தற்போது மறுவெளியீட்டில் பல படங்கள் வெற்றியடைந்து வருவதால், இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT