தமிழ் சினிமா

பஹல்காம் தாக்குதல்: கவனம் ஈர்த்த ஆண்ட்ரியாவின் கருத்து

ஸ்டார்க்கர்

பஹல்காம் தாக்குதல் குறித்த ஆண்ட்ரியாவின் கருத்து, இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தினால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இதில் ஆண்ட்ரியாவின் கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆண்ட்ரியா, “ஒரு காலத்தில் நானும் பஹல்காமுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் நிலையறிந்து மனமுடைந்துவிட்டேன். அதே வேளையில், இந்த சம்பவத்துக்குப் பிறகு இன்னும் அதிகமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் காஷ்மீர் மக்களின் நிலையை நினைத்து வருந்துகிறேன்.

நமது நாடு பிரிவினையை நோக்கி செல்லும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. இச்சம்பவத்தினை ஒரு குறிப்பிட்ட மதம் / சமூகம் மீதான வெறுப்பாக திசைதிருப்பாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை. நான் அடிக்கடி என் கருத்தைப் பேசுவதில்லை, ஆனால் இதைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

SCROLL FOR NEXT