தமிழ் சினிமா

இணையத்தில் வைரலாகும் ரஜிஷா விஜயனின் மாற்றம்

ஸ்டார்க்கர்

உடலமைப்பை முழுமையாக மாற்றியிருக்கும் ரஜிஷா விஜயனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பவர் ரஜிஷா விஜயன். தமிழில் ‘கர்ணன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ‘ஜெய் பீம்’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது அவருடைய உடலமைப்பை முழுமையாக மாற்றி, ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.

இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த உடற்பயிற்சியாளர் அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ரஜிஷா விஜயனின் பழைய மற்றும் புதிய புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த மாற்றத்துக்கு ரஜிஷா விஜயன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதைக் கூறியிருக்கிறார்.

இந்தளவுக்கான மாற்றம் கண்டிப்பாக ஏதேனும் ஒரு படத்துக்காகவே இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக தமிழில் ‘சர்தார் 2’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்களில் ரஜிஷா விஜயன் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT