தமிழ் சினிமா

‘ஹிட்’ 4-ம் பாகத்தில் நாயகன் கார்த்தி?!

ஸ்டார்க்கர்

‘ஹிட்’ வரிசை படங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி.

சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி நடித்து, தயாரித்துள்ள படம் ‘ஹிட் 3’. இதன் டீஸர் மற்றும் போஸ்டர்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. கதையின் இறுதியில் வரும் கார்த்தி, ‘ஹிட் 4’ படத்தின் நாயகனாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், ‘ஹிட்’ வரிசை படங்கள் முடிவடையும்போது, அதன் அடுத்த பாகத்துக்கான நாயகன் அறிமுகம் இருக்கும். அதன்படி முதல் பாகத்தில் விஸ்வாக் சென், 2-ம் பாகத்தில் ஆத்வி சேஷ் , 3-ம் பாகத்தில் நானி நடித்துள்ளனர். தற்போது 4-ம் பாகத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் மூலம் நானி தயாரித்து, நடித்துள்ள படம் ‘ஹிட் 3’. சைலேஷ் கோலனு இயக்கியுள்ள இப்படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இதன் விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

SCROLL FOR NEXT