நேற்றைய நிகழ்ச்சியில் அனைவரின் எதிர்பார்ப்பையும் உடைத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து நித்யா வெளியேற்றப்பட்டார்.
வழக்கத்துக்கு மாறாக கடந்த வாரம் குழுக்களாக இணைந்து நாமினேட் செய்ததால் அந்தந்த குழுக்களை தனித்தனியாக அமரச் செயதார் கமல்.
பின்னர் வழக்கம் போல நாமினேட் ஆனதற்கான காரணங்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் (நேரத்தை ஓட்ட வேண்டுமல்லவா?)
பொன்னம்பலம் காப்பாற்றப்பட்டு விட்டதாக நேற்றே சொல்லப்பட்டு விட்டதால் இப்போது மீதி இருப்பவர்கள் பாலாஜி, நித்யா, யாஷிகா.
”நீங்களாகவே நாமினேட் செய்து கொண்டதாலோ என்னவோ மக்கள் உங்களுக்கு அந்த வரத்தை கொடுக்கவில்லை” என்று பாலாஜியிடம் சொன்னார் கமல்.
நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் பதட்டத்துடனே இருந்தார் பாலாஜி. நித்யா இன்னும் காப்பாற்றப்படவில்லை என்ற காரணம்தான்.
ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ”ஒன்னுமில்லை சார்” என்று கூறிக் கொண்டிருந்தார்.
கமல் மீண்டும் மீண்டும் கேட்கவும் “நானும் நித்யாவும் 7,8 மாதங்களாகவே பிரிந்து இருந்தோம். கோர்ட் தவிர வேறு எங்கேயும் பார்த்துக் கொள்வதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவரோடு இருப்பதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வீடு ஏற்படுத்திக் கொடுத்தது” என்று நெகிழ்ந்தார் பாலாஜி.
ஆரம்பத்திலிருந்தே யாஷிகாதான் வெளியேறப்போகிறார் என்றே குறிப்புகளால் உணர்த்திக் கொண்டிருந்தார் கமல்.
இடையில் மூன்று இடைவேளை வேறு. கடைசியாக நித்யா என்று அறிவித்ததும் பார்வையாளர்களும் அதிர்ந்திருக்கக் கூடும்.
ஏனெனில் கடந்த திங்கள் முதலே யாஷிகாதான் வெளியேற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொன்னம்பலம் ரசிகர்கள்(?) குரல் எழுப்பினார்கள்.
விஜய் டிவியின் முகநூல் பக்கத்தில் மீம்களின் மூலமும், பின்னூட்டங்களிலும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி கடந்த வாரம் விஜய் டிவி பேஸ்புக்கில் நடத்திய கருத்து கணிப்பிலும் யாஷிகாவுக்கு மற்றவர்களை விட குறைவான ஓட்டுக்களே கிடைத்தன.
இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது யாஷிகாவை விட நித்யாவுக்கே அதிக ஓட்டு கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.
அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக நித்யா நேற்று வெளியேற்றப்பட்டார். டிஆர்பியை கருத்தில் கொண்டு யாஷிகாவை வெளியேற்றாமல் நித்யாவை வெளியேற்றி விட்டார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி