தமிழ் சினிமா

வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் வரும்: விக்ரம்

செய்திப்பிரிவு

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'வீர தீர சூரன்- பாகம் -2'. மார்ச் 27-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களைச் சந்தித்து வந்தார் விக்ரம்.

ஈரோட்டில் ரசிகர்களுடன் அவர் பேசும்போது, “இந்தப் படத்துக்கு சிறந்த வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல படத்தை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றி. இது ரசிகர்களுக்காக பண்ணிய படம். இதன் முதல் பாகம் மற்றும் 3-ம் பாகம் விரைவில் உருவாகும். முதல் பாகத்தில் எனது கதாபாத்திரத்தின் பின்னணி கதை இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT