ஆகஸ்ட் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜ் - ரஜினி படத்தில் நடிக்கவிருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு டேராடூனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நவாசுதீன் சித்திக், சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பது உறுதிச் செய்யப்பட்டாலும், எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ரஜினியுடன் நடிக்கவிருப்பது குறித்து விஜய் சேதுபதி “இறைவி’ படப்பிடிப்பின் போதே, ரஜினியிடம் கதை கூறியிருப்பதை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார். அப்போதே நான் ரஜினியுடன் நடிக்கவிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் மாதத்தில் எனது காட்சிகள் படமாக்கப்படவுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது ரஜினி, சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. அதனை முடித்துவிட்டு, சென்னையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள மதுரை பின்னணி அரங்கில் சில முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.