தமிழ் சினிமா

‘ஜன நாயகன்’ அப்டேட்: ஒன்றிணையும் ஹிட் இயக்குநர்கள்!

ஸ்டார்க்கர்

‘ஜன நாயகன்’ படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் முந்தைய படங்களின் இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள்.

விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் விஜய் - பாபி தியோல் இருவரும் பங்கேற்ற சண்டைக் காட்சி ஒன்றை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு காட்சி ஒன்று இருக்கிறது. அதில் விஜய்யிடம் கேள்வி கேட்கும் நபர்களாக லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகும் கடைசிப் படம் என்பதால் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்துள்ளனர்.

விஜய்யை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்கள் என்பதால், இந்தக் காட்சிக்கு திரையரங்குகளில் பெரியளவில் வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. மேலும், மே மாத இறுதிக்குள் விஜய்யின் காட்சிகளை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் சில முக்கிய காட்சிகள் மற்றும் பாடல் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. விஜய், பாபி தியோல், கவுதம் மேனன், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT