தமிழ் சினிமா

தொடங்கியது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு!

செய்திப்பிரிவு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வரவேற்பைப் பெற்றது. இதில் முத்துவேல் பாண்டியன் என்ற சிறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதையடுத்து இதன் அடுத்த பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இதில் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ, வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நேற்று தொடங்கியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடக்க இருக்கின்றன.

SCROLL FOR NEXT