‘வாடிவாசல்’ படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறனின் உழைப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.
சென்னையில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் தயாரிப்பாளர் தாணு. இவருடன் இயக்குநர் வெற்றிமாறனும் மேடையில் இருந்தார். இருவரிடமும் ‘வாடிவாசல்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
முதலில் தயாரிப்பாளர் தாணு, “2 நாட்களுக்கு முன்பு ஜி.வி.பிரகாஷ் ஒரு ட்யூன் அனுப்பிவைத்தார். அதை இப்போது பாடினாலும் வைரலாகிவிடும். சமீபத்தில் சூர்யாவை சந்தித்து 4 மணிநேரம் பேசிவிட்டு, பின்பு இப்பாடலை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். அவரது உழைப்பு நெகிழ வைக்கிறது, மகிழ வைக்கிறது. திரையுலகிற்கு கிடைத்த பெரிய கற்பக விருட்சம் தம்பி வெற்றிமாறன்” என்று தெரிவித்தார்.
தாணு பேசிய வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி மற்றும் வெங்கி அட்லுரி படத்தினை முடித்துவிட்டு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.