விக்ரம் பிரபு நடிப்பில் தயாராகி இருக்கும் 'சிகரம் தொடு' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல், தனுஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.
விக்ரம் பிரபு, மோனல் காஜர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்ப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிகரம் தொடு', இப்படத்தை ’தூங்காநகரம்’படத்தின் இயக்குநர் கௌரவ் இயக்குகிறார், இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வியாழக்கிழமை(ஆகஸ்ட் 7) சென்னையில் நடைபெற இருக்கிறது. கமல் இப்படத்தின் இசை வெளியிட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக் கொள்கிறார். 'சிகரம் தொடு' ட்ரெய்லரை தனுஷ் வெளியிட, பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக் கொள்கிறார்.
விக்ரம் பிரபு நடித்த முதல் படமான 'கும்கி' இசையினை கமல், ரஜினி இருவரும் இணைந்து வெளியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'சிகரம் தொடு' செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது யு.டிவி நிறுவனம்.