மதுரை: ‘பேட் கேர்ள் ’ பட டீசரை நீக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, கூகுளின் இந்திய நிறுவன அதிகாரி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை வெங்கடேஷ், ராம்குமார் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஜன.26 - ல் யூடியூப் இணையத்தில் பேட் கேர்ள் என்ற திரைபட டீசர் வெளியானது. இந்த டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது.
இதுபோன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம். இது பாலியல் குற்றமாகும். இந்த ஆபாச டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி தனபால், மனு குறித்து மத்திய அரசு, கூகுளின் இந்திய நிறுவன அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.