விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்துக்கு ‘ரன்னர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கிறார். சிதம்பரம் ஏ. அன்பழகன் இயக்கும் இந்தப் படத்தை, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர்.
துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தர்ஷன் ரவிகுமார் இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சிலம்பரசன் வெளியிட்டார். படம் பற்றி இயக்குநர் சிதம்பரம் ஏ.அன்பழகன் கூறும் போது, “இந்தப் படத்துக்காக பாலாஜி முருகதாஸ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார்.
இரவு 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு, காலை 5.30 மணிக்குத் தடகள பயிற்சியில் இறங்குவது அவரது அட்ட வணையாக உள்ளது. அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும்” என்றார்.