தமிழ் சினிமா

மெகா பட்ஜெட் காரணமாக விஷால் - சுந்தர்.சி படம் டிராப்?

செய்திப்பிரிவு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த, ‘மதகஜராஜா’, 12 வருடத்துக்குப் பிறகு கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தப் படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது. இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இதில் காமெடி வேடத்தில் நடிக்க சந்தானத்திடம் பேசி வருவதாகவும் அவர் மறுத்தால் வடிவேலுவிடம் பேச இருப்பதாகவும் தகவல் வெளியானது. பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.அருண்குமார் தயாரிக்க இருந்தார்.

இந்நிலையில் பட்ஜெட் அதிகமாகச் சென்றதால் படம் கைவிடப்பட்டதாகக் கூறுகின்றனர். விஷால் தனக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்டதாகவும் சுந்தர்.சி சம்பளம் ரு.20 கோடி என்றும் கூறப்படுகிறது. இவர்கள் சம்பளம் மட்டுமே ரூ.50 கோடி ஆன நிலையில், பட்ஜெட் அதிகரித்ததால் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT